×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த நடிகைதான் என் குடும்பத்தைக் கெடுத்ததே.... இப்போ பெண்ணியம் பேசுறாங்க! கையை அறுத்து என்ன பிளாக்மெயில் பண்ணாங்க... கண்ட்ரோல் பண்ண முடியாமல் கதறிஅழுத ரவிமோகன்...!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவிமோகன் நடத்திய அவசர பத்திரிகையாளர் சந்திப்பில், குடும்ப பிரச்சினைகள் மற்றும் சைபர் தொல்லைகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவிமோகன் நடத்திய அவசர பத்திரிகையாளர் சந்திப்பு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வாழ்க்கை, பிளாக்மெயில், சைபர் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்த அவர், செய்தியாளர்கள் முன்னிலையிலேயே கண்கலங்கினார். அவரது குற்றச்சாட்டுகள் தற்போது சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.

குடும்ப வாழ்க்கை குறித்து பகீர் குற்றச்சாட்டு

செய்தியாளர்களிடம் பேசிய ரவிமோகன், “என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த மூன்று எழுத்து இட்லி நடிகைதான்” என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். செய்வதையெல்லாம் செய்துவிட்டு தற்போது பெண்ணியம் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பேசிய அவர், தன்னை பல ஆண்டுகளாக மனஅழுத்தத்தில் வைத்திருந்ததாக தெரிவித்தார். “கையை அறுத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்துதான் திருமணம் நடந்தது” என்றும் அவர் கூறினார். மேலும், தனது பெயரில் ஒரு வங்கி கணக்கே இல்லை என்றும், பல கோடி ரூபாய் கடன் இருந்தபோதும் குழந்தைகளுக்காக அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்மாவை அடிச்சாங்க அதனால் அப்படி ஆச்சு! ஜாய் கிறிஸ்டா மகன் கூறிய உண்மை! கதறியழுத மாமியார்! இனி இப்படி ஒரு ரங்கராஜ் வர கூடாது...

கண்ணீரில் உடைந்த நடிகர்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது பலமுறை உணர்ச்சிவசப்பட்ட ரவிமோகன், தேவையில்லாத அவமானங்களை தாங்க முடியாமல் போய்விட்டதாக கூறி கதறி அழுதார். அருகிலிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

தன்னுடன் நெருக்கமாக இருந்த தோழி கெனிஷாவையும் தானே விலக்கி அனுப்பியதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

AI மார்ஃபிங் மூலம் சைபர் டார்ச்சரா?

மேலும், தன்னை குறிவைத்து AI தொழில்நுட்பம் மூலம் மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாகவும் ரவிமோகன் குற்றம்சாட்டினார். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை எதிர்புறத்திலிருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. அதே நேரத்தில், ரவிமோகனின் இந்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: என்னை டார்ச்சல் பண்ணாதே.... நிம்மதியா விடு! இல்லையென எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் விட்டு கதறி வெளியிட்ட வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ravi Mohan #ரவிமோகன் #Kollywood #AI morphing #சென்னை செய்திகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story