என்னை டார்ச்சல் பண்ணாதே.... நிம்மதியா விடு! இல்லையென எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் விட்டு கதறி வெளியிட்ட வீடியோ!!!
சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா, ஆதி என்ற நபரை குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டுகள். காதல், திருமணம், பண மோசடி குறித்து கண்ணீருடன் பேசி வெளியிட்ட வீடியோ...
‘சின்ன மருமகள்’ சீரியலில் நடித்துவரும் நடிகை ஸ்வேதா, தனது தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி உருவாகியுள்ள சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசினார். தன்னை கணவர் என கூறிக்கொள்ளும் ஆதி என்ற நபர் அளித்து வரும் பேட்டிகளுக்கு எதிராக, அவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
காதல், பதிவு திருமணம்…
ஸ்வேதா கூறியதாவது, கல்லூரி காலத்தில் ஆதி என்ற நபரை காதலித்து, குடும்பத்தின் அனுமதியின்றி பதிவு திருமணம் செய்ததாக தெரிவித்தார். குடும்பத்தினரை விட்டு விலகி, அவருடன் வாழ்க்கையை தொடங்கியதாகவும் கூறினார். ஆரம்பத்திலேயே தொழில் தொடங்கப் போவதாக கூறிய அவர், பின்னர் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லி அடிக்கடி பணம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் நம்பிக்கையுடன் கொடுத்ததாகவும், பின்னர் அவை விற்கப்பட்டதாக தெரிந்தபோது அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
இது குறித்து உண்மை தெரிந்தபின், அவரது குடும்பத்தினர் எச்சரித்ததாகவும், அந்த நேரத்தில் கூட அவருக்காக தானே பாதிக்கப்பட்டதாகவும் ஸ்வேதா குறிப்பிட்டார். சில நாட்கள் அலைந்து திரிந்த நிலையில், பின்னர் ஆதி வீட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அங்குள்ள சூழல் சரியாக இல்லாமல் போனது. இதையடுத்து, சென்னைக்கு மாற்றம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: உயிர் கொடுத்துவிட்டு... அவன் ஆட பார்த்தது விளையாட்டுக்காக! வைரலாகும் ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவு! வைரல் புகைப்படங்கள்...
வேலை, கடன்… இப்போது நீதிமன்றம்
பள்ளி காலம் முதலே மாடலிங் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துவந்த அவர், சென்னை வந்த பிறகே சீரியல் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். தற்போது சின்ன மருமகள் சீரியலில் நடித்துக்கொண்டு, குடும்பத்தை தானே பார்த்ததாகவும் தெரிவித்தார். தன் சம்பாதிப்பை முழுவதும் அவருக்காக செலவழித்ததாகவும், வழக்குகள் தொடர்பாக கடன் வாங்கியதாகவும் கூறினார். தற்போது அந்த உறவு முற்றிலும் சிதைந்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
இதையடுத்து, ஆதி குறித்து கடும் கோபத்துடன் பேசிய ஸ்வேதா, தன்னை மன ரீதியாக பாதித்துள்ளதாகவும், தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இந்த காதல் சர்ச்சை காரணமாக தன்னுடைய வாழ்க்கை அமைதியாக இல்லை என்றும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்ச்சைக்கு நடுவில் மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...