69 வயதுடைய நடிகருடன் நயன்தாரா ஜோடி! ஆனால் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா வைத்த ட்விஸ்ட்! தயாரிப்பு குழுவினர் அதிர்ச்சி...!
69 வயதுடைய நடிகருடன் நயன்தாரா ஜோடி! ஆனால் நடிக்க மிகப்பெரிய சம்பள தொகையை கேட்டதாள் தயாரிப்பு குழுவினர் அதிர்ச்சி...!

இந்திய திரையுலகில் தனது தனிப்பட்ட நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகை நயன்தாரா, இப்போது புதிய சம்பள விவகாரத்தால் திரையுலகத்தில் பேசுபொருளாக உள்ளார்.
தற்போது வெளியாகிய ‘டெஸ்ட்’ எனும் திரைப்படம் ஓடிடி வழியாக நேரடியாக வந்தும், எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது. இதனால், நயன்தாராவின் கடைசிப் படம் சிறப்பு காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நயன்தாரா தனது வரவிருக்கும் படங்களால் மீண்டும் ரசிகர்களை கவர திட்டமிட்டுள்ளார். தற்போது அவர் கைவசம் டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, Hi உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் உள்ளன.
இதையும் படிங்க: 24 குழந்தை பெத்துக்கணும்.! ஆனா அந்த பிரச்சினை.. எமோஷனலாக ரகசியத்தை உடைத்த நடிகை ரோஜா!!
இந்நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவிபுடி கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை தேர்வு செய்ய எண்ணியுள்ளனர். இப்படம் குறித்து நயன்தாராவிடம் பேசிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர், அவரை கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளதால் தயாரிப்பு குழுவினருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஏனெனில், சாதாரணமாக நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதன்முறையாக வானவில்லை பார்த்து மகிழ்ந்த உயிர் மற்றும் உலக்... நயன்தாரா பகிர்ந்த மனதை உருக்கும் வீடியோ இதோ!