தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

24 குழந்தை பெத்துக்கணும்.! ஆனா அந்த பிரச்சினை.. எமோஷனலாக ரகசியத்தை உடைத்த நடிகை ரோஜா!!

24 குழந்தை பெத்துக்கணும்.! ஆனா அந்த பிரச்சினை.. எமோஷனலாக ரகசியத்தை உடைத்த நடிகை ரோஜா!!

actress-roja-share-about-baby-wish Advertisement

90'ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாதுறையை கலக்கியவர் நடிகை ரோஜா. அவர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகை ரோஜா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். அவர் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார்.

இயக்குனரை மணந்த ரோஜா

நடிகை ரோஜா 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை ரோஜா மற்றும் ஆர்கே செல்வமணி இருவரும் தங்களை குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

Roja

இதையும் படிங்க: முதன்முறையாக வானவில்லை பார்த்து மகிழ்ந்த உயிர் மற்றும் உலக்... நயன்தாரா பகிர்ந்த மனதை உருக்கும் வீடியோ இதோ!

24 குழந்தைகள் பெத்துக்க ஆசை

அப்பொழுது அவர்கள், நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெத்தெடுக்கணும் என முடிவு செய்தோம். ஆனால் அப்பொழுது எனக்கு உடல்நிலை பிரச்சனையால் குழந்தை பிறப்பதற்கு சான்ஸ் ரொம்ப கம்மி என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதுகுறித்து என்னிடம் சொல்ல வேணாம் என ஆர்கே செல்வமணி கூறியுள்ளார். 

நம்மை மீறிய சக்தி

பின்னர் முதல் முறை கர்ப்பமானதும் மருத்துவரிடம் சென்றபொது அவர் ஆச்சரியத்துடன் மிக்க மகிழ்ச்சி அடைந்து பின்னரே எனது உடல்நல பிரச்சினை குறித்து என்னிடம் கூறினார்.  கடவுள் இரு குழந்தைகளை எனக்கு பரிசாக கொடுத்தார். நம்மை மீறியும் ஒரு சக்தி இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன் என நடிகை ரோஜா எமோஷனலாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ரசிகர்களின் பேவரைட் குக் வித் கோமாளி சீசன் 6.! எப்போ தெரியுமா??

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Roja #baby #health issues
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story