கம்பீரமான வேற லெவல் லுக்.! மோகன்லாலின் விருஷபா.! ரசிகர்களை கவர்ந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
நடிகர் மோகன்லாலின் விருஷபா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த எம்ரான் 2, தொடரும் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா, ஹிருதயப்பூர்வம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
மோகன் லாலின் விருஷபா
தொடர்ந்து நடிகர் மோகன்லால் கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கத்தில் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் 'விருஷபா'. இப்படத்தில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, சஹ்ரா எஸ் கான், ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மது பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த விஷயத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!!
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இதனை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிலையில் விருஷபா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச்சாகியுள்ளது. மேலும் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய நடிகை தீபிகா படுகோனே.! என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!!