ப்பா.. கல்யாணத்திற்கு பிறகும் குறையாத கிளாமர்.! கலர்ஃபுல் உடையில் ரசிகர்களை கவர்செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்.!!
கிளாமரான கலர்ஃபுல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர் பெருமளவில் பிரபலமடையவில்லை. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
சினிமா துறையில் கீர்த்தி சுரேஷ்
இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் அண்மையில் பாலிவுட்டில் பேபி ஜான் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை கீர்த்தி சுரேஷ் சில மாதங்களுக்கு முன் தனது தனது நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது கிளாமரான கலர்ஃபுல்லான உடை அணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: திருமணத்துக்குப் பிறகும் ஸ்டைலிஷ் லுக்.. வெள்ளை நிற ஆடையில் கீர்த்தி சுரேஷின் மின்னும் புகைப்படம் வைரல்!?
இதையும் படிங்க: குட்டி டவுசரில் கியூட்டாக கொஞ்சி விளையாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்.! அதுவும் யாருடன் பார்த்தீங்களா!! வைரல் வீடியோ..