குட்டி டவுசரில் கியூட்டாக கொஞ்சி விளையாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்.! அதுவும் யாருடன் பார்த்தீங்களா!! வைரல் வீடியோ..
குட்டி டவுசரில் கியூட்டாக கொஞ்சி விளையாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்.! அதுவும் யாருடன் பார்த்தீங்களா!! வைரல் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்'. இப்படத்தில் அவர் பெருமளவில் பிரபலமடையவில்லை. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் அண்மையில் பாலிவுட்டில் பேபி ஜான் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் சில மாதங்களுக்கு முன் தனது தனது நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்கள் சில தோல்வியையே தழுவியது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது தனது செல்ல நாய்க்குட்டியுடன் ஃபேஸ்மாஸ்க் அணிந்து விளையாடும் க்யூட்டான வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: மீனா செய்த செயலால் அதிர்ச்சியில் விஜயா! அம்மாவுக்காக முதல்முறையாக பேசிய முத்து! சிறகடிக்க ஆசை புது ப்ரோமொ காட்சி...
இதையும் படிங்க: பிரபல டாப் சீரியல்களின் நாயகிகள் சேர்ந்து செய்த வேலையை பாருங்க! வைரலாகும் வீடியோ...