தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது மகன் போல.. அவருக்கு நான் சித்தப்பா.! பிரபல டாப் நடிகருக்கு வாழ்த்து கூறிய கமல்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா??

எனது மகன் போல.. அவருக்கு நான் சித்தப்பா.! பிரபல டாப் நடிகருக்கு வாழ்த்து கூறிய கமல்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா??

kamal-wishes-to-kannada-actor Advertisement

மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். இவர் குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் அடியெடுத்து வைத்தார். மேலும் நடிகர் சிவராஜ்குமார் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்த் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கியுள்ளார்.

kamal

40 ஆண்டுகள் நிறைவு

நடிகர் சிவராஜ்குமார் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அவருக்கு பல மொழி பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நடிகர் சிவராஜ்குமாருக்கு  வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எனது மகன் போல

அந்த வீடியோவில் நடிகர் கமல், சிவராஜ்குமார் எனக்கு  மகன் போல; நான் அவருக்கு சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா என் மீது காட்டிய அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடியதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து அப்பா வழியில் சாதித்துக் கொண்டிருப்பது, சாதிக்க போவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என கன்னடாவில் வாழ்த்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாஞ்சில் விஜயனின் முத்த மழை பாடலின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்! அதுவும் கடைசி ரியாக்ஷனை பாருங்க....

கன்னட மொழி பிரச்சனை பூதாகரமாகி கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிவராஜ் குமாருக்கு கமல் கன்னடத்தில் வாழ்த்து கூறியதை ரசிகர்கள் கமலுக்கு பெரிய மனசு என கூறி கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag விலை எவ்வளவு தெரியுமா? வெளியான பெறுமதி.. ஷாக்கில் ரசிகர்கள்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #Sivarajkumar #kannada
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story