ஓ... இப்படி ஒன்னு இருக்கா? நான் அந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்...! அப்பா எனக்கு கற்று கொடுத்த பாடம்... சிக்மா விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!!!
சிக்மா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள திரைப்படமான ‘சிக்மா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சுந்தீப் கிஷன், ஃபாரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், தனது தந்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தந்தை படம் குறித்து ஆர்வமாக உள்ளார்
நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தந்தை ‘சிக்மா’ படத்தின் வெளியீட்டுக்காக மிகவும் ஆர்வமாக காத்திருப்பதாக தெரிவித்தார். ஆனால், படத்தின் விளம்பர நிகழ்வுகளில் விஜய் பங்கேற்க மாட்டார் என்றும் அவர் கூறினார். விளம்பரங்கள் முழுவதும் படத்தையும் அதன் குழுவினரையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், தற்போது விஜய் முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு பல்வேறு பொறுப்புகள் இருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்தார். அவர் பேசி முடித்ததும் அரங்கில் இருந்த ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ‘டிவிகே’ என முழக்கமிட்டனர். அதற்கு ஜேசன் சஞ்சய் சிரித்தபடி தம்ப்ஸ்-அப் காட்டினார்.
“சுயமாக அனுபவிக்க அப்பா ஊக்குவித்தார்”
தந்தையிடமிருந்து தான் கற்றுக்கொண்ட முக்கியமான குணம் நேரத்தை கடைப்பிடிப்பது எனவும் அவர் கூறினார். அதேபோல், எல்லாவற்றையும் தந்தை செய்து கொடுக்காமல், தானாக களத்தில் இறங்கி அனுபவங்களை பெறுவதற்கு விஜய் ஊக்குவித்ததாகவும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்டார்.
தந்தையின் பிரபலத்தை மட்டுமே சார்ந்து இல்லாமல், இயக்குநராக தனது சொந்த அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் ஜேசன் சஞ்சய் இருப்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது. ‘சிக்மா’ படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் அவர் பேசிய கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: அப்பாடா... முடிவுக்கு வந்ததா விஜய் - த்ரிஷா உறவு...! இப்போ பேச்சுவார்த்தையே இல்லையா..? பின்னணி என்ன..? வெளியான பரபரப்பு தகவல்கள்...!!!