×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சற்றுமுன்.... ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு! குஷியில் குத்தாட்டம் போடும் ரசிகர்கள் கூட்டம் !!!

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சிக்கல் முடிவுக்கு வந்தது. மறுஆய்வு குழுவிற்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு; பிப்ரவரி 20 வெளியீடு சாத்தியம்.

Advertisement

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியீட்டை நோக்கி முன்னேறி வரும் நிலையில், சென்சார் தொடர்பான சிக்கல்கள் தற்போது தீர்வுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுஆய்வு குழுவிற்கு படம் அனுப்ப தீர்மானம்

படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்களை சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் படம் சென்சார் போர்டின் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கையும் வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பிப்ரவரி 20 வெளியீடு சாத்தியம்

மறுஆய்வுக் குழுவினர் ஒரு வாரத்திற்குள் படத்தை மீண்டும் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் பட்சத்தில், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது. ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: மார்னிக் மகிழ்ச்சி செய்தி! ஜனநாயகன் ரிலீஸ்..... ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு! குஷியில் விஜய் ரசிகர்கள்!

சென்சார் போர்டின் க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், விளம்பர நடவடிக்கைகளும் அதிரடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட ரீதியான தடைகளைத் தவிர்த்து, ஜனநாயகன் விரைவில் திரையரங்குகளில் வெளிவரப் போவதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jananayagan #ஜெயம் ரவி #tamil cinema #Censor Board #movie release
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story