மார்னிக் மகிழ்ச்சி செய்தி! ஜனநாயகன் ரிலீஸ்..... ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு! குஷியில் விஜய் ரசிகர்கள்!
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கக்கூடும் என்ற தகவல், ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினரிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் சர்ச்சை
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கை வாரியம், அதனை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்தது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
மேல்முறையீடு மற்றும் இடைக்கால தடை
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில், தங்களின் தரப்பு விளக்கத்தை முழுமையாக முன்வைக்க போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என தணிக்கை வாரியம் வாதிட்டது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... இளையராஜா பாடல்கள் பயன்படுத்த தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!
தயாரிப்பு தரப்பின் வாதம்
இதற்கு பதிலளித்த தயாரிப்பு தரப்பு, படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தணிக்கை வாரியம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியது. இந்த தாமதம் திரைப்பட வெளியீடு தொடர்பான திட்டங்களை பாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்புக்கான எதிர்பார்ப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பிறகே வெளியீட்டுத் தேதியை அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். தற்போது தீர்ப்பு 27-ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் பரவியுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால், பிப்ரவரி கடைசி வாரம் அல்லது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: BREAKING: இன்னும் சற்றுநேரத்தில்..... ஜனநாயகன் படம் குறித்து விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!!