"இந்துடா வந்து பாருடா" எச். ராஜா வெளியிட்ட பர்ஸ்ட் லுக்.. விபரம் உள்ளே.!
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா 'இந்துடா வந்து பாருடா' படத்தின் முதற்பார்வையை வெளியிட்டார்.
சின்னப்ப கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள "இந்துடா வந்து பாருடா" படத்தின் முதல்பார்வையை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வெளியிட்டு இருக்கிறார்.
எச். ராஜா வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகவே ஜாதி, மதம் என பல்வேறு சர்ச்சைக்குரிய படங்கள் வருகின்றன. இதனை வெளியிடும் படங்கள் அரசியல்வாதிகள் ரீதியான அடையாளத்தையும் நேரடியாக பெறுகிறது. இந்த விஷயங்கள் தொடர்ந்து நடப்பது திரைப்பட ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தாலும், ஒருதரப்பில் படம் வரவேற்பையும் பெறுகிறது. இவ்வாறான படங்கள் வசூல் ரீதியிலான விஷயத்தில் மிகுந்த பின்னடைவை தந்தாலும், படத்தின் வெளியீடுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், "இந்துடா வந்து பாருடா" என்ற படத்தின் முதற்பார்வையை எச். ராஜா வெளியிட்டு இருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் குதூகலம்! ஜெயிலர் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.! வீடியோ வைரல்..!!
தேசபக்தி இயக்குனர்கள் உருவாக வேண்டும்:
"தேசபக்த ஸ்வயம் சேவக், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், “மோடியின் தமிழகம்” புத்தகத்தின் ஆசிரியர் அன்புத் தம்பி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “இந்துடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் சினிமாவில் யாரும் தொடத் துணியாத கதையை சகோதரர் சின்னப்பா கணேசன் அவர்கள் துணிந்து படமாக்கி உள்ளார். தேசதுரோக, இந்துவிரோத, ஜாதிவெறி - மதவெறி கும்பல்களிடம் சிக்கி தமிழ் சினிமா, நாசமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், சின்னப்பா கணேசன் போன்ற ஏராளமான தேசபக்த இயக்குனர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் “இந்துடா" போன்ற துணிந்து உண்மைகளை பேசும் திரைப்படங்கள் வெளிவரும். இது தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக்கும்.
இறைவன் அருள்புரிய வேண்டும்:
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நாரதர் மீடியா விஜய் சாமி, கதாநாயகிய நடித்துள்ள சுமித்ரா, ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருமை நண்பர் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், நடிகர் ரவி, சுமமேகா, டிஎஸ் பாண்டியராஜ் மற்றும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள காவியன் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த நிறுவனம், இதுபோன்று இன்னும் ஏராளமான தரமான திரைப்படங்களை தயாரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் திரைக்கு வர இருக்கும் “இந்துடா" திரைப்படத்தை நாம் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் திரையரங்குகளுக்கு சென்று கண்டு மகிழ்வதோடு, மற்றவர்களையும் இந்த திரைப்படத்தை பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
"இந்துடா வந்து பாருடா" படத்தின் முதல்பார்வையை வெளியிட்ட எச். ராஜா:
இதையும் படிங்க: விஜய் சொன்னது எல்லாம் நடந்தா எப்படி இருக்கும்ன்னு நீங்களே பாருங்க! ஏஐ (AI) செய்து காட்டிய அதிசய வீடியோ!!!