×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் சொன்னது எல்லாம் நடந்தா எப்படி இருக்கும்ன்னு நீங்களே பாருங்க! ஏஐ (AI) செய்து காட்டிய அதிசய வீடியோ!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் அறிவித்த பெண்கள் பாதுகாப்பு திட்டம், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்விளக்கு வசதி குறித்து AI வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மையமாகக் கொண்ட தொலைநோக்கு திட்டங்கள் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட இந்த அறிவிப்புகள் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டங்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் வெளியிட்ட அறிவிப்பில், பெண்களின் பாதுகாப்பு முதன்மையாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க பிரத்யேக குழுக்களும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மின்விளக்கு வசதிகளை மேம்படுத்தும் திட்டம்

தமிழகத்தில் “இருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத மாநிலம்” உருவாக வேண்டும் என்ற நோக்கில், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் மின்விளக்கு வசதிகளை மேம்படுத்தும் பணியில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபடும் என்றும் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் இரவு நேரங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பாகச் செல்லும் சூழல் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தவெக விஜய்யின் மகளிர் நல வாக்குறுதிகள்.... பெண்களுக்கு 8 கிராம் தங்கம், அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம்! விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்!!!

AI தொழில்நுட்பத்தில் உருவான காட்சிகள் வைரல்

விஜய்யின் இந்த திட்டங்களை காட்சிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழகத்தின் வீதிகள் ஒளிவெள்ளத்தில் மிதப்பதும், பாதுகாப்பு வளையத்திற்குள் பெண்கள் அச்சமின்றி பயணிப்பதும் போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் எதிர்கால மாற்றத்தை முன்கூட்டியே காட்சியாக வெளிப்படுத்தியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த AI காட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றன.

 

இதையும் படிங்க: தவெக மகளிர் அணி கள்ளக்காதலை ஆதரிக்கிறதா? பெண் ஒருவர் நறுக்குன்னு சொன்ன பதில்....வைரலாகும் வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Vijay #Women Safety Tamil Nadu #தமிழக வெற்றிக் கழகம் #AI Technology #Vijay Political Vision
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story