குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடக்கம்; ஜிவி பிரகாஷ் அறிவிப்பு.!
குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடக்கம்; ஜிவி பிரகாஷ் அறிவிப்பு.!

தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி என மெகாஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லீ என்ற படத்தில் இயக்குனராக பணியாற்றுகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது.
ஜிவி பிரகாஷ் இசையில், அபிநந்தன் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. 2025 ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ரூ.300 கோடி செலவில் படம் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: அன்னைக்கி பெயிண்டர், இன்னைக்கி நடிகர் - நடிகர் சூரி பெருமிதம்.!
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படமான இப்படத்தை ரசிகர்கள் காத்திருக்கும் அதேவேளையில், இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, குட் பேட் அக்லீ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று வெளியிடப்படுவதாக, படத்தின் தயாரிப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். இதனால் விடாமுயற்சி கொண்டாட்டத்துடன், அடுத்த அப்டேட் வெளியானதன் காரணமாக தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?