விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?
விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித், திரிஷா, ஆரவ் உட்பட பலர் நடிப்பில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளவில் பல மொழிகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் படத்தி திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
இந்நிலையில், முதல்நாளில் விடாமுயற்சி திரைப்படம் ரூ. 60.32 கோடி வசூல் செய்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில், அப்படம் முதல் நாளிலேயே ரூ.60 கோடி வசூலை கடந்துள்ளது.
ரூ.300 கோடி அளவில் படத்திற்கு செலவாகியுள்ள நிலையில், அத்தொகையை விரைவில் படம் கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விடாமுயற்சி திரையரங்கில் தவெக கொடி.. இளைஞரை வெளுத்து அனுப்பிய அஜித் ரசிகர்கள்.! வீடியோ வைரல்.!