நடிகை சீதாவா இது.! திடீரென ஏன் இப்படி செய்தார்?? புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
நடிகை சீதா தலைமுடியின்றி மொட்டையடித்தவாறு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சீதா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை சீதா சின்னத்திரையில் களமிறங்கி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சீதா திருமண வாழ்க்கை
இவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நடிகரும், இயக்குனருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் அவர் தனது 43 வயதில் தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.
இதையும் படிங்க: தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மொட்டை தலையுடன் சீதா
தற்போது அவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் யூடூயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை சீதா யூடியூப் சேனலில் கடைசியாக வெளியிட்ட காணொளியில் தலையில் முடி இல்லாமல் மொட்டையாக உள்ளார். மேலும் இது நீண்ட நாள் வேண்டுதல், தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த வயதில் செய்திருக்க கூடாது.! வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.! மனம் வருந்திய நடிகை ரேவதி!!