×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன? 

Darsha Gupta Case: நடிகை உட்பட 12 பேரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Advertisement

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பேசுவதாக பிரபல நடிகை உட்பட 12 பேருக்கு எதிராக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

புகார்: 

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை-லைன்மேடு பகுதியில் வசித்து வருபவர் அஜித். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், 

இதையும் படிங்க: ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..! 

தீங்கான உள்ளடக்கம்: 

"சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், யூட்யூப்களில் 18 வயதிக்கும் கீழ் உள்ள இளம் சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பதிவுகளை பலரும் வெளியிடுகிறார்கள். இவர்களின் மீது உரிய நடவடிக்கை வேண்டும்.  

யார் யார்? 

திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூரிய பிரபா, ஹனி சென்னை, அபிநய சித்ரா, பிரியங்கா ராஜ், சரண்யா, சந்தோஷ், ஐஸ்வர்யா சிவா, திவி திலகவதி, கரூர் தீபா, சிந்தசேகர் ஆகியோர் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்கள். அனைத்தையும் காட்டுவேன் என கூறுகிறார்கள். 

மோசடி: 

இவ்வாறாக பேசி தங்களை பின்தொடர பணம் சந்தா முறையில் செலுத்துமாறும் கூறுகின்றனர். மோசடியாக பல லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இவர்களின் செயல்கள் இளைஞர்கள், இளம் தலைமுறையை சீரழிக்கிறது. இவர்களின் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைப்பக்கத்தை தடை செய்ய வேண்டும்" என கூறி இருக்கிறார். 

வழக்குப்பதிவு: 

தற்போது இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் 12 பேரின் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress #Salem Police #Dharsha Gupta
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story