என்ன வச்சு இப்படியெல்லாம் பண்றாங்க ..... நான் தற்கொலை செய்யப்போறேன்! இதுக்கு எருமை சாணி விஜய் பொண்டாட்டி தான் காரணம்! அவுங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை....ரிசார்ட் வெப் சீரிஸ் நடிகையின் அதிர்ச்சி வீடியோ!!!
நடிகை அனுராகா நம்பியார் இன்ஸ்டாகிராம் லைவில் தற்கொலை எச்சரிக்கை; ஒப்பந்தம், வேலை வாய்ப்பு தடை குறித்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தியது.
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸில் நடித்து வரும் நடிகை அனுராகா நம்பியார் தற்கொலை செய்யலாம் என கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் லைவில் வெளியிட்ட அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வேலை வாய்ப்பு, ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்தில் சிக்கிய நடிகை குற்றச்சாட்டு
கேரளாவில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் வந்ததாக கூறிய அனுராகா, ‘ரிசார்ட்’ வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக அழைத்ததாக தெரிவித்துள்ளார். ‘வெப் சீரிஸ்’ வாய்ப்புக்காக ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வேறு எங்கும் வேலை செய்ய முடியாதபடி தடை விதிக்கப்பட்டதாக கூறினார். தகவலின்படி, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பிற்கே முறையாக அழைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: மனசாட்சி உறுத்தியதால் இப்போ அதை செய்வதில்லை! நானே பல நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அனுப்பி இருக்கிறேன்! பிரபலம் போட்டுடைத்த உண்மை!
மருத்துவ அவசரம், பணம் தொடர்பான பிரச்சனை
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் ஆனதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நண்பர் ஒருவர் தயாரிப்பு தரப்பிடம் பணம் கேட்டபோது அவமதிப்பாக பேசியதாகவும் கூறினார். இந்த நிலையில், ‘தற்கொலை எச்சரிக்கை’ விடுத்த அவர், உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்றால் தீவிர முடிவை எடுத்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு தடை குறித்த குற்றச்சாட்டு
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பிற குழுக்கள் நடிக்க அழைத்த போதும், தன்னை அனுமதிக்காமல் தடுத்ததாகவும் அனுராகா குற்றம்சாட்டினார். கடந்த சில வாரங்களாக வேலை இல்லாமல், வருமானம் இன்றி சிரமத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் கடுமையான முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் இதற்கு பதில் அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.