உங்களுக்கு பாட்ஷா படம் பிடிக்காதா? ரஜினிகாந்த் கேட்ட கேள்வி! உடனே படத்தை புட்டு புட்டு வைத்த மணிகண்டன்! அதைக்கேட்டு அசந்துபோன சூப்பர் ஸ்டார்!
காலா படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய உரையாடலை நடிகர் மணிகண்டன் பகிர்ந்தார். அண்ணாமலை படம் ஏன் சிறந்தது என விளக்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்கள் குறித்த விவாதங்கள் எப்போதும் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நடிகர் மணிகண்டன் சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்த ஒரு அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
காலா படப்பிடிப்பு தளத்தில் நடந்த உரையாடல்
ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன், காலா படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு டிஸ்கஷனை நினைவுகூர்ந்தார். ஒருநாள் ரஜினி நடித்த படங்களில் எது சிறந்தது என்ற விவாதம் அனைவருக்குள்ளும் நடந்ததாகவும், அந்த உரையாடலில் ரஜினிகாந்தும் உடனிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அட... 7ஆம் அறிவு படத்தின் வில்லன் நடிகரா இது? இப்போ இப்படி மாறிட்டாரே... தற்போதைய புகைப்படம் இதோ!
பாட்ஷா vs அண்ணாமலை
பாட்ஷா பிடிக்குமா, அண்ணாமலை பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தபோது, அங்கு இருந்த பெரும்பாலானோர் பாட்ஷா படம் பிடிக்கும் என கூறியுள்ளனர். ஆனால் மணிகண்டன் மட்டும், தனக்கு அண்ணாமலை படம் தான் அதிகம் பிடிக்கும் என கூறியதாக தெரிவித்தார்.
அண்ணாமலை ஏன் சிறந்தது?
இதைக் கேட்ட ரஜினி, “பாட்ஷா படம் பிடிக்காதா?” என்று கேட்டபோது, மணிகண்டன், பாட்ஷாவும் பிடிக்கும்; ஆனால் அண்ணாமலை அதைவிட கிரேட் என்று விளக்கினார். பாட்ஷா படத்தில் வில்லன் இறந்தால் கதை முடிந்துவிடும். ஆனால் அண்ணாமலை படத்தில் வில்லன் கதாநாயகனின் நண்பன். இறுதியில் மன்னிப்பு, மனிதநேயம், தியாகம் ஆகியவற்றால் அண்ணாமலை உன்னத நிலைக்கு உயர்வதாக அவர் எடுத்துரைத்தார்.
ரஜினியின் ஒப்புதல்
இந்த விளக்கத்தை கேட்டதும், ரஜினிகாந்த் “எஸ்… எஸ்… அண்ணாமலை ரொம்ப நல்ல படம்” என ஒப்புக்கொண்டதாக மணிகண்டன் கூறினார். ஹீரோ–வில்லன் எல்லையை தாண்டி ஒரு தத்துவப் படமாக தமிழ் சினிமாவில் அண்ணாமலை திகழ்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த அனுபவம், ரஜினி படங்களின் ஆழமான கருத்துகளையும், அவை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் தாக்கத்தையும் மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.