அட... 7ஆம் அறிவு படத்தின் வில்லன் நடிகரா இது? இப்போ இப்படி மாறிட்டாரே... தற்போதைய புகைப்படம் இதோ!
7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த ஜானி ட்ரை நுயொனின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக கருதப்படுவது 7ஆம் அறிவு. அந்தப்படத்தின் வில்லனாக நடித்த வியட்நாம் நடிகர் ஜானி ட்ரை நுயொனின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7ஆம் அறிவு திரைப்படம்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த இந்த படம் 2011ஆம் ஆண்டு வெளியானது. தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிவியல் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டிய இந்த படம், அன்றைய காலத்தில் பெரும் சூப்பர்ஹிட் ஆனது.
ஜானி ட்ரை நுயொனின் வில்லன் வேடம்
இந்தப்படத்தில் டாங்க் லீ என்ற வில்லனாக நடித்தவர் ஜானி ட்ரை நுயொன். அவர் காட்டிய ஆக்ஷன் காட்சிகள், தற்காப்புக்கலை நுட்பங்கள் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாதவை. வியட்நாமைச் சேர்ந்த இவர், பின்னர் அதர்வா நடிப்பில் வெளிவந்த இரும்பு குதிரை திரைப்படத்திலும் வில்லனாக நடித்தார்.
இதையும் படிங்க: 'மனம் கொத்தி பறவை' நடிகையா இது.? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?!
புதிய புகைப்படம் வைரல்
7ஆம் அறிவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் தோன்றாத ஜானி ட்ரை நுயொனின் சமீபத்திய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது உடலமைப்பு மற்றும் தற்போதைய தோற்றம் ரசிகர்களை ஆச்சர்ய படவைத்து வருகிறது.
சினிமா ரசிகர்களுக்கிடையில் இன்னமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வில்லனாக நினைவுகூரப்படும் ஜானி ட்ரை நுயொன், அவரது புதிய புகைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய திருப்பாச்சி பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்....