சரசரவென சரியும் தங்கம் விலை...! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1880 குறைவு..! வெள்ளி விலையும் குறைந்தது..!!!
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 சரிந்து புதிய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினமும் மாற்றம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது.
சவரனுக்கு ரூ.1,880 குறைந்த தங்கம்
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840-க்கும், கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.11,980-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் வாங்க போறீங்களா..? இன்னும் 4 முதல் 6 மாதங்களில் ஆனந்த் சீனிவாசன் சொன்ன அதிரவைக்கும் தகவல்..!!!
தொடர்ந்து விலை குறைந்து வருவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இந்த விலை மாற்றத்தை கவனித்து வருகின்றனர்.
24 கேரட் தூய தங்கம் விலையும் சரிவு
அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,069-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்தது
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கல! தொடர்ந்து குறையும் தங்கம் விலை... இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2040 குறைவு..!!!