×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கம் வாங்க போறீங்களா..? இன்னும் 4 முதல் 6 மாதங்களில் ஆனந்த் சீனிவாசன் சொன்ன அதிரவைக்கும் தகவல்..!!!

ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரமாகக் குறைந்துள்ள நிலையில், அடுத்த 4 முதல் 6 மாதங்களில் மேலும் 10 சதவீதம் சரிந்து ரூ.90 ஆயிரத்திற்குக் கீழ் செல்ல வாய்ப்புள்ளதாக ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.

Advertisement

வரலாறு காணாத உயரத்தைத் தொட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம், தற்போது ரூ.97 ஆயிரம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த விலை சரிவு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

4 முதல் 6 மாதங்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு

தங்கம் விலை சரிவு குறித்து தனது கணிப்பைப் பகிர்ந்துள்ள ஆனந்த் சீனிவாசன், சுமார் 6 மாதங்களுக்கு முன்பே தங்கத்தின் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் கணித்தபடியே விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கல! தொடர்ந்து குறையும் தங்கம் விலை... இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2040 குறைவு..!!!

மேலும், அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்க வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய விலையிலிருந்து மேலும் 10 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.90 ஆயிரத்திற்கும் கீழ் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளார்.

சீனாவின் தங்கக் கொள்முதல் முக்கிய காரணம்

இருப்பினும், தங்கத்தின் விலை எந்த அளவுக்குக் குறையும் என்பதை சர்வதேச சந்தையில் சீனா மேற்கொள்ளும் தங்கக் கொள்முதல் தீர்மானிக்கும் என ஆனந்த் சீனிவாசன் எச்சரித்துள்ளார். எனவே, தங்கம் விலை மேலும் குறையும் என்று 100 சதவீதம் உறுதியாகக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நகை வாங்க வேண்டியவர்கள் தற்போதைய விலைச் சரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். தங்கம் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கல! தொடர்ந்து குறையும் தங்கம் விலை... இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2040 குறைவு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தங்கம் விலை சரிவு #ஆனந்த் சீனிவாசன் #Gold price #தங்கம் ரூ.90 ஆயிரம் #தங்க நகை வாங்க
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story