Breaking: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு 86 ஆயிரத்தை நெருங்கியது! கவலையில் நகை பிரியர்கள்.....
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் நிலையில், 22 கேரட் தங்கம் சவரனுக்கு 85,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் செய்தியாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சாதனை அளவில் உயர்ந்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
22 கேரட் தங்க விலை
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, ஒரு கிராம் தங்கம் 10,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் மட்டும் தங்கம் 3,280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
24 கேரட் தூய தங்க விலை
தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,672 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வு நகை வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தாறுமாறாக ஏறிய தங்கம் விலை! சவரனுக்கு 78,000 க்கு மேல் போயிடுச்சு.. கவலையில் பொதுமக்கள்..
வெள்ளி விலை நிலவரம்
தங்க விலை மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மொத்தத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையுடன் இருக்கின்றனர். நெருங்கிய நாட்களில் விலை குறையுமா என்ற கேள்வி அனைவரையும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: Breaking: வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! கிடு கிடுவென 82 ஆயிரத்தை தொட்டது! அதிர்ச்சியில் பொதுமக்கள்...