Breaking: வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! கிடு கிடுவென 82 ஆயிரத்தை தொட்டது! அதிர்ச்சியில் பொதுமக்கள்...
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயர்வு கண்டுள்ளது. 22 மற்றும் 24 கேரட் தங்கம், வெள்ளி விலை விவரங்கள் இங்கே பாருங்கள்.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. பல நாட்கள் மாற்றமின்றி இருந்த விலையில் இன்று ஏற்பட்ட இந்த உயர்வு, நகைத் துறையிலும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
22 கேரட் தங்க விலை
இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் பேரில் ஒரு சவரன் தங்கம் 81,920 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 10,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்க விலை
அதேபோன்று, 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு சவரன் 89,360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11,170 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்! தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய தங்கம் விலை நிலைவரம்.....
வெள்ளி விலை உயர்வு
வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து தற்போது ஒரு கிராம் 142 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,42,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால், முதலீட்டாளர்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாறுமாறாக ஏறிய தங்கம் விலை! சவரனுக்கு 78,000 க்கு மேல் போயிடுச்சு.. கவலையில் பொதுமக்கள்..