# BREAKING: சரிந்த வேகத்தில் உயரும் தங்கம் விலை! இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு... கவலையில் நகை பிரியர்கள்..!!!
சென்னையில் நவம்பர் 27-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக மீண்டும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று (நவம்பர் 27) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.92,800-க்கும், ஒரு கிராம் ரூ.11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.11,600 ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.480 அதிகரித்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பல்டி அடிக்கும் தங்கம் விலை..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு..!!!
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றம் காணப்படுவதால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள், குறிப்பாக திருமணத்திற்காக நகைகள் வாங்க வேண்டிய குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் அதிரடி உயர்வு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் ஒரே நாளில் உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் சந்தை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.