×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல்டி அடிக்கும் தங்கம் விலை..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு..!!!

கடந்த 2 நாட்களாகக் குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

கடந்த 2 நாட்களாகக் குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சவரனுக்கு ரூ.960 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: போடு வெடிய...! இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2,360 சரிவு..! வெள்ளி விலையும் ரூ.10,000 குறைந்தது! மகிழ்ச்சியில் துள்ளும் நகைப்பிரியர்கள்..!!!

1 லட்சத்தை கடந்த 24 கேரட் தங்கம்

24 கேரட் தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.12,589-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தூய தங்கத்தின் விலை சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: தாறுமாறாக குறையும் தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைவு... துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தங்கம் விலை #Gold rate today #சென்னை தங்கம் #வெள்ளி விலை #22 கேரட் தங்கம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story