×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கம் விலை குறைவு..! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!

சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,720க்கும், சவரன் ரூ.93,760க்கும் விற்பனையாகிறது.

Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம், இன்று விலை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.93,760க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: குறைந்த வேகத்தில் மீண்டும் எகிரும் தங்கம் விலை! 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு...!!!

சவரனுக்கு ரூ.400 குறைந்த தங்கம்

நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 குறைந்ததால் சவரன் விலையிலும் ரூ.400 சரிவு ஏற்பட்டுள்ளது. திடீர் விலை குறைவு நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றங்களை நகை வாங்குவோர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வரலாறு காணாத சரிவு! ஒரு சவரன் ரூ.90,000-ஐ நெருங்கிய தங்கம் விலை...! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தங்கம் விலை இன்று #gold rate Chennai #சவரன் விலை #வெள்ளி விலை #நகை வாங்குவோர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story