×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உறக்கத்தில் உங்களுக்கு விந்து வெளியேறுகிறதா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்..!

உறக்கத்தில் உங்களுக்கு விந்து வெளியேறுகிறதா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்..!

Advertisement

தூக்கத்தில் பலருக்கும் இயற்கையாகவே விந்தணுக்கள் வெளியேறும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விந்தணு வெளியேற்றம் குறித்து கேட்டால் நம்மை கேலி செய்வார்கள் அல்லது தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். 

உறக்கத்தில் விந்தணு வெளியேறினால் உடல் பலவீனமடையும், ஞாபக மராத்தி ஏற்படும் என பலரும் கூறுவார்கள். மருத்துவரிடம் விந்தணு வெளியேற்றம் தொடர்பாக கேட்டால், அது இயற்கியான நிகழ்வு என்று கூறுகிறார்கள். ஆணின் வளர்ச்சி மற்றும் வயதுக்கு வரும் நிகழ்வை விந்தணு வெளியேறுதல் உறுதி செய்கிறது. 

இந்த பிரச்சனையை ஆங்கிலத்தில் Wet Dreams என்று அழைப்பார்கள். ஆண்கள் வயதுக்கு வந்ததும் உடலில் உள்ள டெஸ்டொஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு, மறுசுழற்சி முறையில் விந்தணுவை வெளியேற்றும். 10 வயதில் இருந்து 13 வயது வரை முன்னுக்கு பின்னர் முரணாக செயல்படும் சுரப்பி, 15 வயது அல்லது 20 வயதை கடந்ததும் அமைதியாகிவிடும்.  

10 வயதிற்குள் விந்தணு உறக்கத்தில் வெளியேறினால் Precocious Puberty என்ற ஹார்மோன் பிரச்சனை இருக்கலாம். இதற்கான சிகிச்சை எடுத்து அதனை சரி செய்யலாம். வயதுக்கு வந்ததும் அதிகமாக வெளியேறும் விந்தணு, வயது அதிகரிக்கும் போது அளவை குறைத்துக்கொள்ளும். தாம்பத்தியம் மற்றும் கலவி தொடர்பான புரிதல் இல்லாததால் பல கட்டுக்கதைகள் உலாவி வருகிறது. 

கடந்த 1990 ஆம் வருடம் வரை உலகளவில் மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய நாடுகள் கூட விந்தணு வெளியேற்றம் குறித்து தவறான புரிதலையே வைத்திருந்தது. ஆரோக்கியமான ஆணின் உடலில் உற்பத்தியாகும் விந்து, அவன் வயதுக்கு வந்த நாட்களில் இருந்து, வாழ்நாள் வரை வெளியேறும். உடலில் உற்பத்தியாகும் விந்தை சேமிக்கும் அறை நிரம்பும் பட்சத்தில், அதனை தானாக வெளியேற்றும். இது இயற்கை. 

உடலில் இருந்து வெளியேறு விந்து தாம்பத்தியம் மூலமும், சுய இன்பம் மூலமும், உறக்கத்தின் மூலமும் வெளியேறுகிறது. விந்தணு சுரப்பு மற்றும் வெளியேற்றம் இயற்கையானது என்பதால், அதுகுறித்த பயம் தேவையில்லை. ஆணின் இனப்பெருக்க உறுப்பின் கோளாறு, நோயாளிகள் காரணமாக, பால்வினை நோய்கள் போன்றவற்றால் விந்தணு உற்பத்தி குறையலாம். ஆணின் இனப்பெருக்க உறுப்பு மற்றும் அதிக வெப்பத்தில் பணியாற்றும் போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.

இளம் வயதில் கண்ட புத்தகத்தை படிப்பது, வீடியோ பார்ப்பது போன்றவை காரணமாகவும் விந்தணு வெளியேறும். உறக்கத்தில் விந்தணு வெளியேறுவது உடல் உபாதை என கூற இயலாது. எந்த நேரமும் உல்லாச ஆசையுடன் இருப்பதும் விந்தணுவை வெளியேற்றலாம். மனதில் தூய்மை இருந்தும் விந்தணு வெளியேறுகிறது என்றால், விந்தணு சுரப்பி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். ஒரே நாளில் பலமுறை விந்தணு வெளியேறினால் மருத்துவரை நாடுவது நலம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#18 plus #18 Plus Tips #Couple Enjoy #health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story