×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுய இன்பத்தால் இவ்வளவு உடல் ஆரோக்கியம் இருக்கிறதா?. சிகிச்சையாளர்களின் பதில்கள்!.

சுய இன்பத்தால் இவ்வளவு உடல் ஆரோக்கியம் இருக்கிறதா?. சிகிச்சையாளர்களின் பதில்கள்!.

Advertisement

பொதுவாக சுய இன்பத்தால் பிரச்சினை நிறைய இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் சுய இன்பத்தினால் பல நன்மைகளும் இருக்கிறது என கூறுகின்றனர் சிகிச்சையாளர்கள்.  சுய இன்பம் என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் முகம் சுளிப்பார்கள். ஆனால் அதில் 75% பேர் சுய இன்பத்திற்கு அடிமையாக உள்ளனர் என்பது தான் உண்மை.


சுய இன்பத்திற்கு பெரும்பாலும்  இளம் வயதினர் பலர் அடிமையாக இருக்கின்றனர். அதுவும் ஆண்கள் அவர்களின் பள்ளி பருவத்திலேயே இந்த பழக்கத்தை கற்றுக்கொள்கின்றனர். சுய இன்பத்திற்கு ஆண்களே அதிக அளவில் அடிமையாக உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக சுயஇன்பம் காண்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம் மற்றும் தவறானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இப்படி சுயஇன்பம் கொள்வது ஒருவரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா?

 ஆம், சுயஇன்பத்தினால் பலருக்கு தெரியாத நன்மைகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆய்வு ஒன்றிலும், சுயஇன்பம் கொள்வதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று சொல்கிறது. ஆனால் அதை அளவாக வைத்துக்கொண்டால் மட்டுமே நன்மைகள் இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல அளவுக்கு மீறி இந்த பழக்கத்தை வைத்துக்கொண்டால் கண்டிப்பாக பிரச்சினை வரும் என்பது உண்மை.

மேலும் ஆண்கள் இப்படி சுயஇன்பம் காண்பது, அவர்களது விந்தணுவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான வழிமுறை என்றும் சிகிச்சையாளர்கள் குறுகின்றனர்.

சுயஇன்பம் அனுபவிக்கும் போது, தலையில் ஆக்சிடோசின் என்னும் கெமிக்கல் வெளியேற்றப்படுவதால், அது தலைவலியைக் குறைத்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

ஆண்கள் சுயஇன்பம் அனுபவிக்கும் போது, விந்தணுவானது வெளியேற்றப்படும் போது, சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் தங்கியுள்ள டாக்ஸின்களும் வெளியேற்றப்பட்டு, புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

சுய இன்பத்தால் உடலில் உள்ள அழுத்தமானது குறைக்கப்பட்டு, எண்டோர்பின் என்னும் கெமிக்கல் உற்பத்தியாகி, மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#masturbate #health tips #doctors
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story