விவசாயிகள் நலன் மற்றும் மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய்; நடிகர் சூர்யா அறிவிப்பு !1 crore for farmers actor surya

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றி விழாவில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை  நடிகர் சூர்யா வழங்கினார்.

விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக இப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

agaram

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினர். இவ்விழாவில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். 

agaram

இந்த நிகழ்ச்சியில் விவசாயத்தில் சாதனை படைத்த நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அதாவது மொத்தம் 5 விவசாயிகளுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். விரைவில் இதற்கான பணிகள் அகரம் பவுண்டேசன் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார்.