கிணற்றில் காயங்களுடன் சடலமாக மிதந்த ஆசிரியை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

கிணற்றில் காயங்களுடன் சடலமாக மிதந்த ஆசிரியை; காரணம் என்ன? போலீசார் விசாரணை



sister dead body in canal kerala

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பதனபுரம் தேவாலயத்தின் அருகில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் ஒரு கன்னியாஸ்திரியின் சடலம் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பதனபுரத்தில் மவுண்ட் தபோர் என்னும் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கன்னியாஸ்திரிகள் சிலர் பணிபுரிந்து வருகின்றனர். 

dead in well

சம்பவம் நடந்த அன்று தேவாலயத்தில் பணி புரியும் சில பணியாளர்கள் அந்த தேவாலயத்தில் உள்ள கிணற்றின் அருகே வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது கிணற்றில் அருகே ரத்தத் துளிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பதறிப்போய் அருகில் இருந்த கிணற்றின் உள்ளே பார்த்த அவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

dead in well

அந்த கிணற்றில் ஒரு சடலம் மிதந்துக் கொண்டு இருப்பதைக் கண்ட அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அதன் பிறகு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டெடுத்த பிறகு தான் அவர் அந்த தேவாலயத்தை சேர்ந்த சூசன் மாத்யூ என்னும் 54 வயதான கன்னியாஸ்திரி என்பது தெரிய வந்தது. அவர் அந்த தேவாலயத்தை சேர்ந்த செயிண்ட் ஸ்டீபன் பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் ஆவார்.

அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்த காவல்துறை அதிகாரி அசோகன், "கன்னியாஸ்திரியான சூசன் மாத்யூ வெகு நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் நேற்று மருத்துவரை சந்தித்ததில் இருந்தே மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டார். மற்ற கன்னியாஸ்திரிகள் பிரார்த்தனைக்கு சென்ற போது அவர் உடன் வர மறுத்துள்ளார். அதன் பிறகு அவரை கிணற்றில் பிணமாக கண்டெடுத்துள்ளனர்." என தெரிவித்துள்ளார்.

சூசன் மாத்யூ தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது யாரும் கொலை செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.