விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
அதிக மதிப்பெண் பெற ஆசிரியரின் ஆசைக்கு பணிந்த பள்ளி மாணவி; இறுதியில் நடந்த விபரீதம்!!
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராம்பாபு. அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் தேர்வுகளில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
அதிக மதிப்பெண்களுக்கு ஆசைப்பட்டு அந்த மாணவியும் ஆசிரியரின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மாணவியும் இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் இருந்தள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி கர்ப்பம் அடைந்தள்ளார். இந்த விசயத்தையும் வீட்டிற்கு தெரியாமல் மறைந்து அந்த ஆசிரியரிடம் மட்டும் கூறியுள்ளார். இதனை அறிந்த ராம்பாபு அந்தக் கருவைக் கலைப்பதற்காக கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி அந்த மாணவியிடம் கொடுத்துள்ளார்.
இதை சாப்பிட்ட அந்த மாணவிக்கு கடுமையான வயிற்று வலியுடன் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கருவை கலைத்தள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதற்கெல்லாம் காரணம் அந்த ஆசிரியர் தான் என்று தெரிந்து கொண்டனர்.
மேலும் அந்த ஆசிரியரின் சில்மிஷங்கள் ஊர் மக்களுக்கு தெரிய வந்த நிலையில் அவரை கடுமையாக தாக்கி நிர்வாணமாக காவல்நிலையத்திற்கு இழுத்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.