சமூகம் ஆன்மிகம்

சபரிமலை: கல்வீச்சு, தடியடி என தீவிரமடையும் போராட்டம்; பெண் நிருபர் தாக்கப்படும் பதற வைக்கும் வீடியோ காட்சி.!

Summary:

sabarimalai ayyappan kerala

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்கள், பெண் நிருபர்கள் மீது போராட்டக்காரர்களால் தீவிர தாக்குதலை தொடுத்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது இந்நிலையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று முதல் போராட்டம் தொடங்கியது இந்நிலையில் ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் இன்று மாலை திறக்கப்பட உள்ளது. 

சபரிமலையில் பெண்கள்:

இதனால் போராட்டம் தீவிரமடைந்து போராட்டக்காரர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியான நிலக்கல்லில் முகாமிட்டு அவ்வழியாக செல்லம் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் பெண்கள் பயணித்தால் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அதில் ஒரு பெண் பத்திரிக்கை நிருபரை தாக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. 

இதனால் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி உள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களும் எதிர்த்து போலீசாரின் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர். இதனால் போலீசார் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் கலவரம் எழும் அபாயம் உள்ளதால்  கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு


Advertisement