எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
கோவையில் பயங்கரம்: பாஜகவினரின் பார்ட்டியில் பாட்டிலால் குத்தி ஒருவர் படுகொலை!!
கோவையில் பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்ட கறி விருந்து விழாவில் ஏற்பட்ட வரவு செலவு தொடர்பான பிரச்சினையில் பாஜக பிரமுகர் ஒருவர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் சார்பில் அங்கு வசிக்கும் மக்களிடம் பணம் வசூலித்து விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கான செலவு போக மீதி பணம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மீதி இருந்த பணத்தைக் கொண்டு விழாவினை நடத்திய பாஜகவினர் தங்களுக்குள் மதுவுடன் கூடிய கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வரவு செலவு தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாஜக பிரமுகரான நாகராஜ் என்பவரை பாஜக இளைஞரணி தலைவர் குட்டி என்கின்ற கந்தசாமி பாட்டிலால் குத்தி உள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள கே.ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று மாலை நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கந்தசாமி மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கந்தசாமியை தேடி வருகின்றனர்.