சமூகம் General

அட பாவமே!! இரவில் கிணற்றின் அருகில் நின்றுகொண்டு செல்போனில் பேசிய இளைஞருக்கு நடந்த கொடுமையை பாருங்கள்

Summary:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் அருண்குமார் (வயது 24). திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரட்டுச்சாலையூரை சேர்ந்தவர். இந்த நிலையில் அருண்குமாருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு அருண்குமார் கரட்டுச்சாலையூருக்கு வந்தார். இந்த நிலையில் அருண்குமார் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி

40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் இருந்ததால் படுகாயம் அடைந்து அருண்குமார் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர், கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement