இந்தியா சமூகம்

பத்மஸ்ரீ விருது பெற்ற பாபா ஆம்தேவுக்கு டூடுள் வெளியிட்டு கூகுள் பெருமை சேர்த்துள்ளது.!

Summary:

maharashtira - baba amte - todul - google

பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக ஆர்வலர் பாபா ஆம்தேவுக்கு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் பெருமை சேர்த்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் பாபா ஆம்தே.  வசதியான குடும்பத்தில் பிறந்தவராக இருந்ததால் இளமையில் கண்மூடித்தனமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

அதன்பிறகு தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு அவரது மனம் மிகவும் வருந்தி அவர்களுக்காக உதவிகளை செய்யத் தொடங்கினார். அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு சிறந்த சமூக சேவகராக மாறினார்.

இன்று அவருடைய 104வது பிறந்த நாளை கொண்டாடும் மனிதநேய ஆர்வலர்கள் அவரை முரளிதர் தேவிதாஸ் ஆம்தே என்றும் ’பாபா ஆம்தே’ மற்றும் ’ஃபாதர் ஆம்தே’ போன்ற பெயர்களால் அழைக்கின்றனர்.

தொடர்ந்து மனிதநேய செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வந்த பாபா ஆம்தேவுக்கு 1971ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதேபோல 1988ம் ஆண்டு ஐநா சபை, மனித உரிமைகள் பிரிவில் உயரிய பரிசையும், 1999 அமைதிக்கான காந்தி விருதையும் பாபா ஆம்தேவுக்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. 

இன்று நாடு முழுவதும் அவரது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் கூகுள் நிறுவனம் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக டூடுள் வெளியீட்டு பெருமைப்படுத்தியுள்ளது


  


Advertisement