தமிழகம் சமூகம்

வெளிநாட்டிலிருந்து வந்ததும் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்; காரணம் என்ன..!!

Summary:

husbend - wife - pirachinai

மனைவியின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராமசாமி, கவுசல்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்தார். இந்த நிலையில் சென்ற மாதம் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பினார் வீடு திரும்பிய அன்றே உருட்டு கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

Image result for dead body

உடனே அருகில் இருந்தவர்கள் கௌசல்யாவை தூக்கிக்கொண்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் ராமசாமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கௌசல்யா அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருந்தாலும் சிகிச்சை பலனின்றி  இறந்ததும் ராமசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அப்பொழுது தெரிவித்த அவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவருடைய  நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு மனைவியின் நடத்தையை பற்றி கூறியதாக தெரிவித்தார். 


Advertisement