உல்லாசத்திற்கு மறுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவனின் வெறிச்செயல்..!

உல்லாசத்திற்கு மறுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவனின் வெறிச்செயல்..!


husband-killed-wife-for-sex

திருச்சியில் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் நள்ளிரவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். இவருக்கு வயது 34. இவர் இன்சூரன்ஸ் எஜென்ட்டான பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெசிந்தா ஜோஸ்பின் (26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இன்சூரன்ஸ் எஜென்ட்டான சகாயராஜ், வேலைக்கு சரியாக செல்வதில்லையாம். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன், ஜெசிந்தாவின் 2.5 சவரன் தங்க நகையை அவருக்குத் தெரியாமல் சகாயராஜ் அடகு வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜெசிந்தா, தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். 

wife killed in trichy

அதற்கு பிறகு சகாயராஜ் அவரது பெற்றோருடன் தஞ்சாவூரில் இருக்கும் ஜெசிந்தாவின் வீட்டிற்குச் சென்று சமாதானம் பேசி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜெசிந்தாவும்  சகாயராஜுடன் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சிக்கு திரும்பியுள்ளார். 

கடந்த ஒருவாரமாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை ஓடியது. பின்னர் கடந்த சனிக்கிழமை மீண்டும் வழக்கம்போல் அவர்களுக்குள் தகராறு உருவானது. அதன்பின்னர் சகாயராஜ் ஜெசிந்தாவுடன் வலுகட்டாயமாக உறவு வைத்துக்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு ஜெசிந்தா மறுப்பு தெரிவிக்கவே சகாயராஜ் மிகவும் கோபமடைந்துள்ளார்.

மனைவி மீது ஆத்திரம் தீராத சகாயராஜ் அவரை கொலை செய்துவிட திட்டமிட்டுள்ளார். அதன்படி இரவு இரண்டு மணிக்கு ஜெசிந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த பொது ஜெசிந்தா விழித்துக் கொண்டார். உடனே சுதாரித்த சகாயராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ஜெசிந்தாவின் கழுத்தை அறுத்து உள்ளார். மேலும் அரிவாளை வைத்து அவரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

wife killed in trichy

இதனை தொடர்ந்து, திருவெறும்பூர் காவல்துறையினர் சகாயராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். உறவு கொள்ள மறுத்த  மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.