18 வயசுல என்னடி பாய் பிரண்ட்?.. இளம்பெண்ணை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!Girl attacked by her family shocking video gone viral

 

என்னதான் உலகம் தொழிநுட்பம், வளர்ச்சி என்று பல்வேறு கருத்தியலோடு எதிர்காலத்தை நோக்கி பயணித்தாலும், மனிதர்களின் பண்புகள் சில இடங்களில் இன்றளவும் மாறாமல் இருக்கின்றன. அவற்றுள் சில பண்பாடாக தொடருகிறது, எதிர்கால பயத்தை எண்ணி செயலை ஊக்குவிக்கிறது. 

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், இளம்பெண்ணை ஒரு பெண் உட்பட 2 பேர் கடுமையாக தாக்கி தங்களின் இலலத்திற்குள் அழைத்து செல்கின்றனர். 

 

அந்த விடியோவை பதிவிட்டவர் இளம்பெண்ணுக்கு ஆண் நண்பர் இருப்பது உறுதியானதால் பெற்றோர் தாக்குகின்றனர் என விடியோவை பதிவிட்டு இருக்கிறார். ஆனால், ஒரு நபர் அந்த இளம்பெண் திருடியதால் பெற்றோர் அடிக்கின்றனர் என மற்றொரு விடியோவை பதிவிட்டுள்ளார். 

இதனால் சம்பவம் எங்கு நடந்தது? எதற்காக பெண் தாக்கப்பட்டார்? என்ற விசாரணையை காவல் துறையினரின் கவனத்திற்கு நெட்டிசன்கள் கொண்டு சென்றுள்ளனர். விரைவில் உண்மை அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.