தமிழகம் சமூகம்

தர்மபுரியில் குடிசை எறிந்து தீயில் கருகிய குடும்பம்! விபத்தா? தற்கொலையா?

Summary:

Fire accident in dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் அருகே, வயதான தம்பதியினர் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் சாமிசெட்டிபட்டி சோரங்ககுப்பன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் (80) மனைவி முனியம்மாள் (70) தம்பதியினர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வறுமையின் காரணமாக ஓலை குடிசை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

நேற்று இரவு அவர்கள் இருவரும் வழக்கம் போல் வீட்டின் உள்ளே தூங்கியுள்ளனர். அப்போது அவர்களின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எறியத் தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலரி அடித்து ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். 

மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி தீயணைப்புத்துறையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீயை அணைத்ததும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது முனியம்மாள் உடல் கருகி உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய பெருமாளை, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


Advertisement