சமூகம் General

மெரினா பீச்சில் அரைகுறையாய் மூடிய நிலையில் பெண்ணின் சடலம்; உல்லாசத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக?

Summary:

dead body in marina beach

சென்னை மெரினா பீச்சில் நேற்று காலை ஒரு பெண் கொலை செய்யப்பட்டு மணலில் அரைகுறையாக மூடப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மெரினா கடற்கரையின் நீச்சல் குளம் அருகே நேற்று காலை வாக்கிங் சென்ற சிலர் ஒரு பெண்ணின்  பெண்ணின் உடல் மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது உடலெங்கும் காயங்களுடன் அந்த பெண்ணின் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்துள்ளது. அதிகமாக தாக்கப்பட்ட முகத்தின் காயத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்துள்ளது.

marina beach க்கான பட முடிவு

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் உள்ள அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைக் கேட்டு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் அவர் யார், என்ன என்ற விவரங்கள் தெரியவில்லை.

மேலும் அந்த இடத்தை சுற்றி சோதனை செய்ததில் அந்த பெண்ணின் செருப்பும், ஒரு ஆணின் செருப்பும் ஜோடியாக கிடந்துள்ளன. மேலும் மது பாட்டில்களும், அந்த பெண்ணின் செல்போனும் கிடைத்துள்ளது, அந்த செல்போனில் பதிவாகியுள்ள எண்களை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உல்லாசமாக இருக்க அந்த பண்ணை கடற்கரைக்கு யாரோ அழைத்து வந்திருக்கலாம் என்றும், ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அந்த மர்ம நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் தகராறில் அந்தப் பெண் இறந்ததும் பதட்டத்தில் அரைகுறையாக உடலை மணலால் மூடிவிட்டு அவசரத்தில் தனது செருப்பையும் விட்டுவிட்டு கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும் அந்த பெண்ணை கொலை செய்து தப்பி சென்ற மர்ம நபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement