இதற்கு முன்னர் ஆண்கள் தான் இதில் அப்படி! ஆனால் தற்போது பெண்கள் இந்த விசயத்தில் எப்படி இருக்காங்க தெரியுமா?.
முந்தைய காலங்களில்பெண்கள் தங்களது அந்தரங்க விசயங்களை தாயிடமும், திருமணம் ஆன பெண்கள் கணவனிடமும் பகிர்ந்து வந்தனர். ஆண்கள் முந்தைய காலங்களில் இருந்தே இதுபோன்ற விசயங்களை நண்பர்களிடம் எளிதில் பகிர்ந்து வருவதை தற்போது வரை வழக்கமாய் வைத்துள்ளனர்.
ஆனால் பெண்களும் தற்போது அதிகமாக தங்கள் தோழிகளிடமே அது போன்ற விசயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர். என ஆய்வு ஒன்று தற்போது தெரிவிக்கின்றது.
பொதுவாக ஒரு விசயத்தை தங்களது துணையிடம் விவாதித்து அது குறித்த விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால், பெண்கள் இந்த விசயத்தில் வேறுபடுகின்றனர். கணவனை விட தோழிகளிடமே ஓப்பனாக பேசுகின்றனர்.
இது குறித்து ஆய்வு முடிவு வெளியிட்டுள்ள தகவலில், மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல விசயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர். தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள், அவர்களிடம் பல விசயங்களை பகிர்ந்து கொள்வதுடன் அதிகமாக அந்தரங்கம் குறித்த விசயத்தை ஆர்வமுடன் பேசுகின்றனர்.
.jpg)
இவ்வகையை சேர்ந்த பெண்கள் 30 சதவீதத்தினர் உள்ளனர் என ஆய்வு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலும் திருமணம் குறித்த பேச்சு தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விசயங்களையும் பகிர்ந்து பேச ஆரம்பிக்கின்றனர். எதை பற்றியும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத பெண்கள் குறைந்த அளவே உள்ளார்கள் என கூறுகின்றனர்.
அதிகபடியான பெண்கள் தங்களது கணவர்மார்களை குறித்து தோழிகளிடம் பேசுவதாக ஒப்பு கொண்டுள்ளனர். மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த விசயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர்.