புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#18Plus: கணவன் - மனைவி உடலுறவை தவிர்க்க வேண்டிய நேரம் எது?.. தம்பதிகள் தெரிஞ்சிக்கோங்க... தப்பிதவறியும் தப்பு பண்ணிடாதீங்க.!
இல்லறத்தில் இன்மை புகுத்தும் தாம்பத்தியத்தில் பல்வேறு விஷயங்கள் நாம் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் ஆண்களும், பெண்களும் பல விஷயத்தை உடலுறவில் அபரீதமாக தெரிந்துகொண்டால், அதனை அடைய வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் பல விஷயங்களை தெரிந்துகொள்வதை போலவே, அதனை தனது துணையுடன் இருமண விருப்பத்தின் பேரில் உடலோடு உடலாக இணைந்த ஊடல்-கூடலை விட வேறேதும் பெரிதில்லை என்பதை தம்பதிகள் புரிந்துகொள்ள வேண்டும். கட்டிலில் தனது துணைக்கு தேவையானதை இருவரும் கேட்டு பகிர்ந்து செய்து மகிழ்வதே இருவரையும் உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்லும்.
உடலுறவு விஷயத்தில் நாம் பல நுட்பங்களை தெரிந்தாலும், அதனை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவை குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
பெண் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் முதல் மூன்று மற்றும் இறுதி மூன்று மாதங்கள் தம்பதிகள் தாம்பத்தியத்தை தவிர்க்கலாம். இதனைத்தவிர்த்து இடைப்பட்ட காலத்தில் தம்பதிகள் விருப்பத்தின் பேரில் வற்புறுத்தல் இல்லாத விருப்ப உடலுறவை வைத்துக்கொள்ளலாம். வற்புறுத்தல் கொண்ட தாம்பத்தியம் பெண்ணின் மனதை மட்டுமின்றி, குழந்தையின் மனநிலையையும் பாதிக்கும்.
குழந்தைப்பேறுக்கு பின்னர் தம்பதிகள் தங்களின் உடல்நிலையை பொறுத்து சில மாதங்கள் காத்திருந்து உடலுறவு மேற்கொள்ளலாம். சாதாரணமாக குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுத்தால் குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் கடந்து அல்லது மருத்துவ பரிசோதனையில் அனுமதி வந்ததும் தாம்பத்தியம் வைக்கலாம். ஏனெனில் இயற்கை பிரசவத்தில் பெண்ணுறுப்பில் காயங்கள் இருக்கும். அவை சரியாகும் வரை காத்திருப்பதே நன்மை.
ஒருவேளை பிரசத்திற்கு பின் பெண்ணுக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்ற பட்சத்தில், அவரை வற்புறுத்துவது தவறானது. கணவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் அவை குணமாகும் வரை இருவரும் கட்டாயம் உறவை தவிர்க்க வேண்டும். பெண்ணுறுப்பில் பெண்ணுக்கு உடலுறவின் போது கடுமையான எரிச்சல், வலி இருந்தால் தாம்பத்தியத்தை தவிர்க்கலாம்.
ஏனெனில் பெண் தனது இன்பத்தை அடையும்போது தான், பெண்ணுறுப்பில் உடலுறவு வலியை குறைக்கும் திரவம் சுரக்கும். பெண் அரைகுறை இன்பத்துடன் ஆணின் வற்புறுத்தலால் உடலுறவை தொடங்கினால் பெண்ணுக்கு அதிக வலி ஏற்படும். இது பிற்காலத்தில் தாம்பத்திய வெறுப்பை ஏற்படுத்தலாம். ஆகையால், பெண்ணுக்கு இன்பத்தை ஏற்படுத்தி ஆண் செயல்பாடுகளை தொடங்கலாம்.
கருச்சிதைவு அனுபவித்தோர் மற்றும் குறைமாத பிரசவத்தில் குழந்தை பிரசவித்தோர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கணவருடன் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்வது இருவரையும் நோய்வாய்ப்பட வைக்க வாய்ப்புண்டு. பெண் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடலுறவை தவிர்க்கலாம்.