காதல் – உறவுகள் 18 Plus

கருவுறுத்தலுக்கான தாம்பத்திய நிலைகள் என்னென்ன?.. தெரிஞ்சுக்கோங்க., குஜாலா இருங்க.!

Summary:

கருவுறுத்தலுக்கான தாம்பத்திய நிலைகள் என்னென்ன?.. தெரிஞ்சுக்கோங்க., குஜாலா இருங்க.!

கணவன் - மனைவிக்குள் தாம்பத்தியம் என்பது முகம்சுளிக்க வைக்கும் விஷயம் கிடையாது. இரண்டு அன்பு நெஞ்சத்தின் இடையே நடக்கும் உடல்மொழிக்காதல் தான் உடலுறவு ஆகும். அது ஒரு உன்னதமான பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. அபூர்வ பல சக்திகளை கொண்டுள்ளது. 

உடலுறவு கொள்வதில் பல நிலைகள் (Position) உள்ளது. இவற்றில், எந்நிலையும் குழந்தைப்பேறு அளிக்கும். தற்போது உள்ள பல நிலைகள் குறித்து அறிவியல் ரீதியாகவும் நிரூபணம் இல்லை. எதையும் முயற்சித்து பார்க்கலாம் என்றாலும், அதில் இரு உயிருக்கும் எவ்விதமான ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதே இயல்பான கூற்று. 

கர்ப்பமாவதற்கு என சில உடலுறவு நிலைகள் உள்ளன. பல நாடுகளில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டும் இருக்கிறார்கள். இவற்றில், மிஷினரி நிலை என்ற உடலுறவு நிலையில் தாம்பத்தியம் மேற்கொண்டால், கர்ப்பம் தரிக்க புவியீர்ப்பு விசை உதவி செய்து, ஆணின் விந்தணு எளிதில் கருமுட்டையை அடைய உதவி செய்கிறது. இதற்கு சில மருத்துவர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையை விடுத்தால், BMI என்ற நிலை உடலுறவுக்கு ஏற்றது என்றும் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, கருமுட்டை வெளியேறும் ஓவுலேசன் நாள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி 13 ஆவது நாளில் இந்நிகழ்வு ஏற்படும். சீரற்ற மாதவிடாய் இருப்பவர்களுக்கு இந்நிகழ்வு மாறுபடும். உடலுறவு மேற்கொண்ட 24 மணிநேரம் மட்டுமே கருமுட்டை மற்றும் விந்தணு உயிரோடு இருக்கும். 

பெண்களுக்கு கருமுட்டை மாதத்தின் ஒருமுறை மட்டுமே வெளியே வரும். தாம்பத்தியம் மேற்கொள்ள பல விதமான நிலைகள் இருந்தாலும், கர்ப்பமாவதற்கு என சில உடலுறவு நிலைகள் உள்ளன. 

மிஷினரி நிலை : 

மிஷினரி நிலை என்பது தாம்பத்தியம் நடைமுறையில் உள்ள காலத்தில் இருந்து வழக்கத்தில் இருக்கும் பழைய நிலை ஆகும். பெண் கீழே, ஆண் மேலே என்ற நிலையில் இருந்து உடலுறவு மேற்கொள்வதாகும். இந்த நிலை பலருக்கும் இன்றுள்ள காலத்தில் போர் அடித்தாலும், இது குழந்தை உருவாகும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. 

ஆணின் விந்தணு வீணாகாமல் பெண்ணின் கருமுட்டையை சென்றடைய உதவி சேகரித்து. பெண் மேலே இருந்து செய்யும் நிலையில், பெண்ணுறுப்பு வழியே விந்தணு வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கரு உருவாக மிஷினரி நிலை சிறந்ததாக கருதப்படுகிறது. பெண் தனது இடுப்புக்கு கீழ் தலையணை வைத்து உடலுறவு செய்தால் இன்னும் சிறப்புக்கள் கிடைக்கிறது. 

Doggy Style முறைகள் :

பலருக்கும் Doggy Style முறையிலான நிலை தான் தம்பதிகளுக்கு பிரியமான நிலையாக உள்ளது. இதில், பெண்கள் கைகளை முன்புறம் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு இருக்கும் நேரத்தில், ஆண் பெண்ணின் பின்னால் இருந்து உடலுறவு மேற்கொள்வது Doggy Style நிலை என்று கூறப்படுகிறது. இந்த வகையில், ஆணின் விந்தணு கருமுட்டையை எளிதில் சென்றடைகிறது. இதனால் ஆண் - பெண் தாம்பத்திய பேரின்பமும் அதிகளவு கிடைக்கிறது. 

பெண்ணின் கால்கள் தோல் நிலை : (Legs On Shoulders)

காதலுடன் பொழுதுபோக்கான தாம்பத்திய உடலுறவு மேற்கொள்ள நினைக்கும் தம்பதிகள் Legs On Shoulders முறையை மேற்கொள்ளலாம். பெண் மேல்நோக்கி படுத்து, தனது கால்களை தூக்கி காதலனின் தோள்களில் வைக்க வேண்டும். காதலன் அவளின் அருகே முட்டிபோட்டு அல்லது தனக்கு வாக்கான நிலையில் நின்று உடலுறவு மேற்கொள்வது. 

இந்த நிலையில், பெண்ணின் கால்கள் மேல்நோக்கி இருக்கும் காரணத்தால், செர்விக்ஸ் பகுதியின் வழியாக விந்தணு வெளியே வருவது தடுக்கப்பட்டு, விந்தணு கருமுட்டையை எளிதில் சென்றடைந்து கருத்தரிப்பை உறுதி செய்கிறது. 

ஸ்பூனிங் முறை : 

ஸ்பூனிங் நிலை தாம்பத்தியம் என்பது ஆண் - பெண் பக்கவாட்டு பகுதியில் படுத்தவாறு இருந்து, ஆண் பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். ஆண் பெண்ணின் பின்னால் இருந்து உடலுறவு மேற்கொள்ளும் நேரத்தில், பெண்ணின் கால்கள் V வடிவில் இருக்கலாம். இதனால் விந்தணு விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் அதிகம். 


Advertisement