மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

விந்து வெளியேறும்போது உடலின் சத்துக்களும் வெளியேறுமா? எது உண்மை?

Summary:

Are we wasting our strong while releasing sperms

பொதுவாக ஆண்களுக்கு இருக்கும் சந்தேங்களில் ஒன்றுதான் விந்து வெளியேறும்போது அதனுடன் சேர்ந்து நமது சக்திகளும் வெளியேறுமா என்பதுதான். இதிலும் சில ஆண்கள் விந்துவெளியேறபோது அதனுடன் சேர்ந்து நமது ஊட்டச்சத்துக்களும் வெளியேறுவதாக நம்புகின்றனர்.
 

மேலும் சில ஆண்கள் சூன்யஇன்பம் செய்வது தவறு என்றும், சுயஇன்பத்தின்போது வெளியேறும் விந்துவில் நமது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதாகவும் நம்புகின்றனர். ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டு கதையே தவிர உண்மை இல்லை.


பொதுவக்க விந்து வெளியேறும்போது ஒரு டீஸ் பூன் அளவிற்கு விந்து வெளியேறும். இது ஆண்களின் அதிக கிளர்ச்சியை பொறுத்தது வேறுபடும். ஆண் வெளியேற்றும் ஒரு டீஸ்பூன் விந்துவில் சுமார் 200-500 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இதுவும் ஒரு ஆணின் வயது, உடல் நிலை மற்றும் இதர காரணிகளைப் பொறுத்தது.

பொதுவாக ஆண்கள் வெளியேற்றும் விந்துவில் ஒரு சதவீதம்தான் விந்தணு இருக்குமாம். மீதம் 99 % ஃபுருக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், நீர், நொதிகள், சிட்ரிக் அமிலம், புரோட்டீன், ஜிங்க் மற்றும் பாஸ்பேட் போன்றவைதான் இருக்குமாம்.

மேலும் ஒரு ஆணின் விந்தணு உற்பத்தி ஆக சில நேரம் தேவை படுகிறது. விந்தணு உற்பத்தியாகி விந்துப்பை நிரப்பும்போது மூளைக்கு சிக்னல் அனுப்பப்பட்டு பாலுணர்ச்சி தூண்டப்படுகிறது. இதனால் காம உணர்வு தோன்றி சுயஇன்பம் அல்லது உடலுறவில் ஈடுபட தோன்றுகிறது.

பொதுவாக விந்தணுவை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் பழைய விந்தணு வெளியேற்றப்பட்டு புதிய விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.