உலகம் லைப் ஸ்டைல் Covid-19

பேய், ஆவிகள் போல் அலையும் இளைஞர்கள்.! இந்தோனேஷியாவின் கெபூ கிராம மக்களிடையே தோன்றியுள்ள அச்சம்.!

Summary:

Youngsters new way to alert people during lock down

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியே நடமாடிவருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை பின்பற்றாத மக்களை பயமுறுத்துவதற்கு, இந்தோனேஷியாவின் கெபூ கிராம மக்கள் பேய்களைப் போல் வேடமிட்டு ஊருக்குள் சுற்றி வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

முகம் முழுவதும் வெள்ளைப் பவுடர் பூசிக்கொண்டும், ஆவி போல வெள்ளை நிற ஆடைகளை சூடிக்கொண்டும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வெளியே சுற்றுபவர்கள், சாலை ஓரங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் மக்களின் பின்புறம் சென்று அவர்களை பயமுறுத்துகின்றன்னர்.

இதனால் மக்களும் பயந்து தங்கள் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். காவல்துறை எடுத்த ஊரடங்கு முயற்சிகளை விட, உள்ளூர் இளைஞர்கள் எடுத்த பேய் வேட முயற்சிக்கு கெபூ கிராமத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது.


Advertisement