உலகம்

விமானத்தில் பின் சீட்டிலிருந்து முன் சீட்டிற்கு கால்களை தூக்கிப்போட்ட இளம்பெண்! சிறுவன் செய்த செயல்! வைரல் வீடியோ!

Summary:

young boy angry in flight

அமெரிக்காவின் ஹுவுஸ்டலில் இருந்து ப்ளோரிடா நோக்கி பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் டேரில் என்பவர் தனது நான்கு வயது மகனுடன் பயணித்தார். விமானத்தில் சிறுவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் இளம் பெண்ணொருவர் அமர்ந்திருந்தார்.

அந்த இளம்பெண் தனது கால்களை சிறுவன் அமர்ந்திருந்த இருக்கையின் மீது வைத்துள்ளார். இந்த விஷயத்தை சிறுவன் அருகில் இருந்த அவனது தந்தையிடம், ஒரு பெண் கால்களை என் சீட்டில் வைக்கிறார் என கூறியுள்ளான். சிறுவன் அதிர்ச்சியுடன் கூறியதை பார்த்த அவர் தந்தை சிரித்துள்ளார். 

இதனால் கோபம் கொண்ட சிறுவன் அந்த பெண்ணிடம், எனது சீட்டில் ஏன் உங்கள் கால்களை நீட்டுகிறீர்கள் என பேச்சில் கேட்டுள்ளான். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. சிறுவனின் வெகுளிதனமான முகபாவனை அனைவரையும் கவர்ந்து அந்த வீடியோ தீயை பகிரப்பட்டு வருகிறது.


Advertisement