உலகம் லைப் ஸ்டைல்

ஏன் மாஸ்க் போடலன்னு கேட்டதுக்கு ஜீன்ஸ் பேண்டை கழட்டி, உள்ளாடையை எடுத்து மாஸ்க்காக அணிந்த பெண்..! வைரல் சம்பவம்.!

Summary:

Woman strips off and puts her knickers over her face after Ukrainian

தபால்நிலையத்திற்கு மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணை ஊழியர்கள் கேள்வி கேட்டதற்காக அந்த பெண் அனைவர் முன்பும் உள்ளாடையை கழட்டி மாஸ்க்காக அணிந்த சம்பவம் பெரும் வைரலாகிவருகிறது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவில் இருந்து நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்றும்விதமாக மக்கள் அனைவரும் வெளியே வரும்போது மாஸ்க் அணிந்துவருமாறு அனைத்து நாடு அரசுகளும் வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார். மாஸ்க் அணியாதது குறித்து தபால் நிலைய ஊழியர்கள் அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அங்கிருந்த அனைவர் முன்பும் தனது பேண்டை கழட்டி, பின்னர் தனது உள்ளாடையை கழட்டி மாஸ்க்காக அணிந்துகொண்டு பின்னர் மீண்டும் தனது பேண்டை அணிந்துகொள்கிறார்.

இளம் பெண்ணின் இந்த திடீர் செயல் அங்கிருந்தவர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது. மேலும், இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானநிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement