"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
கணவருக்கு கொரோனா! கவலையிலேயே உயிரிழந்த மனைவி! மறுநாளே கணவருக்கு நேர்ந்த விபரீதம்!
கணவருக்கு கொரோனா! கவலையிலேயே உயிரிழந்த மனைவி! மறுநாளே கணவருக்கு நேர்ந்த விபரீதம்!

பிரித்தானியா துர்ஹாம் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் டேவிட் மோரிசன் இவரது மனைவி அன். இந்நிலையில் கடந்த சில காலங்களாக டேவிட் மோரிசனுக்கு கடுமையான கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது மனைவி அன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுதெரிந்த அடுத்த நாளே டேவிட்டும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அவரது மகன் பவுல் கூறுகையில், என் தாயும் தந்தையும் எந்த ஒரு செயலையும் ஒன்றாக இணைந்தே செய்வர். அவர்கள் விரைவில் 50வது திருமண விழாவை கொண்டாடவிருந்தனர். இந்நிலையில் அப்பாவிற்கு கடுமையான கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
அவரது உடல்நிலையை எண்ணியே எனது தாய் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு அடுத்த நாளே மருத்துவமனையில் எனது தந்தையும் உயிரிழந்தார். எனது பெற்றோர்களின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது என கண்ணீருடன் கூறியுள்ளார்.