புருஷன வெட்டி துண்டு துண்டாக அலசி, உப்பு போட்டு ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி..! மிரண்டுபோன போலீசார்.!

புருஷன வெட்டி துண்டு துண்டாக அலசி, உப்பு போட்டு ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி..! மிரண்டுபோன போலீசார்.!


wife-chopped-up-her-dead-husband-and-kept-him-in-the-fr

போதைக்கு அடிமையான தனது கணவனை மனைவி கொலை செய்து, அவரது உடல் பாகங்களை உப்பு தடவி குளிர்சாதன பெட்டியில் அடைத்துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ. இவருக்கு திருமணம் முடிந்து மெரினா குகா (25) என்ற மனைவியும், இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. அலெக்சாண்டர் யுஷ்கோ ரஷ்யாவில் மிகப்பெரிய பாடகர். இவருக்கென ரஷ்யாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான அலெக்சாண்டர் யுஷ்கோ ஊரடங்கு சமயத்தில் அதிக அளவு மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவரது மனைவி கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

Crime

வழக்கம்போல் அலெக்சாண்டர் யுஷ்கோ குடித்துவிட்டு தகராறில் ஈடுபட, மெரினா குகா தனது இரண்டு வயது குழந்தையின் கண் முன்னே கணவனை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் கணவனின் உடலை மறைப்பதற்காக அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, வெட்டப்பட்ட உடல் பாகங்களை துணி துவைக்கும் இயந்திரத்தில் கழுவி, பின்உப்பு தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

பின்னர் வீடு முழுவதும் கழுவி சுத்தம் செய்துவிட்டு தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளார். நாளடைவில் அலெக்சாண்டர் யுஷ்கோவை தொடர்புகொள்ள அவரது நண்பர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை. அவரது மனைவியும் சரியான பதில் கூறாததை அடுத்து அலெக்சாண்டர் யுஷ்கோவின் நண்பர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை அடுத்து அலெக்சாண்டர் யுஷ்கோவின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரது மனைவி மெரினா குகாவிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது மெரினா குகா தனது கணவனை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்திருப்பதாக காவலர்களிடம் கூறியுள்ளார்.

Crime

இதனை கேட்டு மிரண்டுபோன போலீசார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து அலெக்சாண்டர் யுஷ்கோவின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றியுள்ளனர். பின்னர் மெரினா குகாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், மது போதைக்கு அடிமையாகி தனது கணவன் தொல்லை கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக மெரினா குகா கூறியுள்ளார்.

இந்த கொடூர கொலைக்கு மெரினா குகாவின் தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பலட்சம் ரசிகர்களை கொண்ட பிரபலமான பாடகர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.